வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது இதில்
இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் சிஎம்சி கிளையும் டாக்டர் அ.மு.இக்ரம்
சமூக நல அறக்கட்டளை மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் இணைந்து
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் முதலுதவி பயிற்சியை வேலூர் மாவட்ட
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வேலூர் நிலையத்தில் நடத்தின.
நிகழ்சிக்கு வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமை
தாங்கினார். வேலூர் நிலைய அலுவலர் கார்திகேயன் வரவேற்று பேசினார்.
தீயணைப்பு காப்பாளர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் சிஎம்சி
கிளை செயலாளர் டாக்டர் அ.மு.இக்ரம் பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட உதவி அலுவலர் சரவணன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை செயலாளர்
செ.நா.ஜனார்த்தனன் உதவி தீயணைப்பு காப்பாளர்கள் குமரன் ஆர்.சீனிவாசன்,
ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்கள் சிவானந்தம், ரவி மற்றம் மாவட்ட மயக்கமருதுவர் சங்க தலைவர் சி.எஸ்.பழனி, போளுர் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர எம்.கலிமுல்லா, ஆகியோர் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவும், எவ்வாறு பரவாது என்றும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். மேலும் ஒவ்வொருவரும் வெளியிடங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தஉடன் தனது கை, கால், முகம் கழுவ வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்றும் மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பது என்றும் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டுமா என்பது குறித்தும் தேவைப்பட்டால் எவ்வாறு செயற்கை சுவாசம் அளிப்பது என்ற
பயிற்சியும் அளித்தனர். இப்பயிற்சியில் ஓருங்கிணைந்த வேலூர்
மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு மற்றம் மீட்பு நிலையத்தின் வீர்ர்கள்
கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். வேலூர் போக்குவரத்து வார்டன் ஸ்டான்லி,
சின்னசாமி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் தீயணைப்பு வீரர் பாலாஜி நன்றி கூறினார். தீயணைப்பு மீட்பு துறையினருக்கு முதலுதவி மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சியினை இந்திய மருத்துவ சங்க வேலூர் சிஎம்சி கிளை
செயலாளர் டாக்டர் அ.மு.இக்ரம் செயல்விளக்கம் அளித்த போது எடுத்தப்படம்
உடன் மருத்துவர்கள் சிவானந்தம், ரவி, பழனி காட்பாடி ரெட்கிரா1 கிளை
செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தீயணைப்பு காப்பாளர்கள் ஆர்.சீனிவாசன்,
ராமச்சந்திரன் ஆகியோர்.